வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 17 ஆகஸ்ட் 2022 (20:42 IST)

தொழிலதிபர் அதானிக்கு Z பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு உத்தரவு

Adani
தொழிலதிபர் அதானிக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
முக்கிய விவிஐபிகளுக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்குவது வழக்கமான ஒன்றாகும் அந்த வகையில் இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான அதானிக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
 
தொழிலதிபர் அதானி கடந்த சில வருடங்களாக புதிய தொழில்களை அமைத்து வருகிறார் என்பதும் அவருடைய வருமானம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியா மட்டுமின்றி ஆசியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக அதானி திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நிகழ்ந்த 5ஜி ஏலத்தில் கூட அதானி நிறுவனம் ஏலம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது