1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 1 ஏப்ரல் 2024 (11:58 IST)

அதிமுகவுக்கு உயிர் கொடுத்ததே நாங்கள்தான்: அன்புமணி ராமதாஸ்!

அதிமுகவுக்கு உயிர் கொடுத்தது நாங்கள் தான் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைய பாமக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் திடீரென பாஜக கூட்டணியில் இணைந்தது. இதனால் கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் பாமக தலைவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர். 
 
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த அன்புமணி ராமதாஸ் ’அதிமுகவுக்கு பலமுறை நாங்கள் தான் உயிர் கொடுத்தோம். 1996ல் ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டுக்காக சிறை சென்றார். அவருடைய அரசியல் வாழ்வை முடிந்துவிட்டது என்ற நிலை ஏற்பட்டது. அப்போது 1998ல் நாங்கள்தான் கூட்டணி வைத்து அவரையும் அதிமுகவையும் காப்பாற்றினோம் 
 
2019ல் நாங்கள் இல்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியை இழந்திருப்பார், நாங்கள் எந்த துரோகத்தையும் செய்யவில்லை, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதாக சொல்லி எங்களை எடப்பாடி பழனிசாமி ஏமாற்றினார்’ என்று குற்றம் சாட்டியுள்ளார் 
 
அன்புமணியின் இந்த கருத்துக்கு அதிமுக தலைவர்கள் என்ன பதிலடி கொடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva