எனக்கு ஓட்டு போடலைன்னாலும் பரவாயில்லை, அவங்கிகிட்ட மாட்டிக்கிடாதீங்க: செளமியா அன்புமணி
தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிடும் சௌமியா அன்புமணி எனக்கு மாம்பழம் சின்னத்தில் ஓட்டு போடவில்லை என்றாலும் பரவாயில்லை அவங்க கிட்ட மாட்டிக்காதிங்க என்று பிரச்சாரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு பத்து தொகுதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஒரு தொகுதியான தர்மபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்பு மனைவியின் மனைவி சௌமியா போட்டியிடுகிறார் என்பதும் அவர் போட்டியிடுவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வரும் சௌமியா இன்று பேருந்து ஒன்றில் ஏறி பெண்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் உங்கள் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை போடாதீர்கள், அப்படியே போட்டு ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொண்டால் பயப்பட வேண்டாம், அப்பா அம்மாவிடம் உண்மையை கூறி பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார்.
வக்கிர எண்ணம் கொண்ட பலர் சுற்றிக்கொண்டு இருக்கின்றனர் என்றும் அவர்களிடம் தப்பிக்க தைரியமாக முடிவெடுங்கள் என்றும் எதையுமே அப்பா அம்மாவிடம் இருந்து மறைக்காதீர்கள் என்றும் அவர்கள் திட்டினாலும் அதை வாங்கிக் கொண்டு அவர்களுடைய பாதுகாப்புடன் இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
எனக்கு மாம்பழம் சின்னத்தில் ஓட்டு போடவில்லை என்றாலும் பரவாயில்லை, கெட்டவர்களிடம் வந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று சௌமியா பிரச்சாரம் செய்தது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
Edited by Siva