வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 31 மார்ச் 2024 (13:48 IST)

திமுக பயங்கரமா பொய் சொல்லும், பாஜக சொல்ற பொய்யை பயங்கரமா சொல்லும்: நடிகை விந்தியா

திமுக பயங்கரமா பொய் சொல்லும், பாஜக சொல்லுற பொய்ய பயங்கரமா சொல்லும், இந்த இரண்டு கட்சிகளுமே தமிழ்நாட்டுக்கு ஆபத்து என்று நடிகை விந்தியா அதிமுக வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்தபோது கூறினார்.

அதிமுகவின் பிரபல பேச்சாளர் நடிகை விந்தியா கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அவர் மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் ’திமுக பயங்கரமாக பொய் சொல்லும், பாஜக சொல்லுற பொய்யை பயங்கரமாக சொல்லும்

திமுக திராவிட மாடல் என்று ஏமாற்றும், பாஜக இந்திய மாடல் என்று ஏமாற்றும், திமுக கடவுளை திட்டிக் கொண்டே சாமி கும்பிடும், பாஜக கடவுளே திட்ற அளவிற்கு   சாமி கும்பிடும்

ஸ்டாலின் மகனை பற்றி மட்டுமே யோசிப்பார், மோடி மதத்தை மட்டும் மதத்தைப் பற்றி மட்டுமே யோசிப்பார். எனவே பாஜகவில் திமுகவும் நாட்டுக்கு ஆபத்தானவர்கள். இவர்கள் இரண்டு பேரும் மக்களுக்கு தேவையில்லை. எனவே அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்

தேர்தல் சமயத்தில் மக்களை ஏமாற்ற திமுக என்ன வேண்டும் என்றாலும் பேசும், அவர்களிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்றும் நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசினார்.


Edited by Siva