ஓ.பன்னீர் செல்வத்திற்கு சின்னம் ஒதுக்கீடு!
ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப் பழம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் விரும்பிக் கேட்ட வாளி சின்னம் அவர் பெயரிலேயே உள்ள வேறொரு நபருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. இதையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிடி. தினகரனுடன் இணைந்து அரசியல் பயணம் மேற்கொள்வதாக அறிவித்தார்.
இந்த நிலையில், பாஜகவுக்கு ஓ.பன்னீர் செல்வம் ஆதரவளித்த நிலையில், டிடிடி. தினகரனும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். அதனால் அமமுகவுக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சுயேட்சையாக ராம நாதரபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம், வாளி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கோரிகை விடுத்திருந்தார்.
இந்த நிலையில்,இன்று ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப் பழம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் விரும்பிக் கேட்ட வாளி சின்னம் அவர் பெயரிலேயே உள்ள வேறொரு நபருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் மொத்தம் 6 பன்னீர் செல்வம் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.