1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. anbumani ramadoss election manifesto

10 ரூபாய்க்கு சைவ உணவு!.. 25 ரூபாய்க்கு அசைவ உணவு!. பாமக தேர்தல் அறிக்கை!...

anbumani ramadoss
பாமக நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணி.. மருத்துவராக பணியாற்றிய இவர் ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வந்தார்.. பாமகவின் இளைஞர் அணி செயலாளராக பல வருடங்கள் இருந்தவர் அதன்பின் பாமக தலைவராக நியமிக்கப்பட்டார். பாமகவை பொறுத்தவரை கடந்த பல தேர்தலாகவே அதிமுக அல்லது திமுக என மாறி மாறி ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்தது. வன்னியர்களின் வாக்குகளை அடிப்படையாக வைத்து இந்த கட்சி அரசியல் செய்து வருகிறது..

கடந்த சில மாதங்களாகவே ராமதாசுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர், தற்போது பாமக அன்புமணி மற்றும் ராமதாஸ் என இரண்டு தலைமைகளாக பிரிந்து விட்டது.அதில் அன்புமணி தலைமையிலான பாமக அதிமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது. அந்த கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது
.
இந்நிலையில் அன்புமணி ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஏழைகளின் நலன் கருதி 10 ரூபாய்க்கு சைவ உணவும் 25 ரூபாய்க்கு அசைவ உணவும் வழங்கப்படும்..

சென்னையில் செயற்கை அறிவுத்திறன் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம் துவங்கப்படும்..

அனைவருக்கும் தரமான இலவசம் மருந்துகள் கொடுக்கப்படும்..

திமுக அரசு மருத்துவத்துறைக்கு 20 ஆயிரம் கோடி ஒதுக்கியது. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு லட்சம் கோடி ஒதுக்குவோம்..

ஆண்டுக்கு நான்கு முறை சட்டப்பேரவை கூட்டப்படும்.. ஓராண்டில் 100 நாள் சட்டமன்ற நடைபெறுவது உறுதி செய்யப்படும்..

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்..

ஏழை பெண்கள் தொழில் தொடங்க 6 25 ஆயிரம் கடன் வழங்கப்படும்.. அதில் 10 ஆயிரம் மானியம்.. மீதி 15 ஆயிரம் இரண்டு ஆண்டுகளில் தவணை முறையில் கட்ட வாய்ப்பு வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டிருக்கிறது..

பொதுவாக கூட்டணிக்கு தலைமை ஏற்கும் கட்சிதான் அதாவது ஆட்சியை பிடிக்கும் கட்சிதான் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள். ஆனால் அன்புமணி கூட்டணியில் இருக்கும் அதிமுக ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு விட்டது. அப்படி இருக்கும்போது அன்புமணி எதற்காக தனியாக தேர்தல் அறிக்கை வெளியிட்டார் என்பது யாருக்கும் புரியவில்லை.
அடுத்த கட்டுரையில்
குண்டு வெடிக்கும் என 1000 இமெயில் அனுப்பியவர் கைது.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!