செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2019 (18:48 IST)

”கூட்டணி வச்சதுனாலதான் கெஞ்சிக்கிட்டு இருக்கோம்”.. கதறும் அன்புமணி

கொள்கைளை மாற்றி கூட்டணிக்கு சென்றதால், தற்போது சீட்டிற்காக கெஞ்ச வைப்பது வருத்தமளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியில் பாமக இணைந்து போட்டியிட்டதில் அக்கூட்டணி பெரும் தோல்வியை கண்டது. இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் அக்கூட்டத்தில் பேசிய அன்புமனி ராமதாஸ், ”உள்ளாட்சி தேர்தலில் அரை சீட், கால் சீட், என கெஞ்ச வைப்பது வருத்தமளிக்கிறது.

கூட்டணி வைத்ததற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை” என கூறினார்.
மேலும், “கூட்டணியே வேண்டாம் என்ற கொள்கையை மாற்றி கூட்டணிக்கு சென்றோம், ஆனால் இப்போது கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். அந்தந்த மாவட்ட அதிமுக தலைவர்களிடம் சீட் கேட்டு பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் வேதனை அளிக்கிறது” எனவும் கூறியுள்ளார்.