திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (14:34 IST)

விஜய்யை விட ஒரு நடிகர் அதிகம் சம்பளம் வாங்குகிறார் - சீமான் பேட்டி

இன்று சென்னையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார்.
 
அதன்பின் அவர் செய்தியாளார்களுக்கு அளித்த பேட்டியில்,  மலேசியாவிலேயே தைப் பூசத்திற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால் தைப் பூசத்திற்கு தமிழகத்திலும் விடுமுறை வழங்க வேண்டும் என ஒரே கோரிக்கைக்காக முதல்வரை சந்தித்தேன் என தெரிவித்தார்.
 
மேலும், நேற்று ரஜினி திடீரென்று சிஏஏவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க என்ன காரணம் என்ன?
18% விழுக்காடு கந்துவட்டிக்கு ரஜினி பணத்தை கடன் கொடுப்பது இது மிகவும் குறைச்சலான விழுக்காடா என கேள்வி எழுப்பினார். 
 
மேலும், நடிகர் விஜய்யை விட ஒரு நடிகர் அதிகம் சம்பளம் பெறுகிறார். அவர் யார் என அனைவருக்கும் தெரியும் என தெரிவித்தார்.