புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (11:43 IST)

ரஜினியின் ஹிட்லர் முகம் தெரிந்துவிட்டது: சுப வீரபாண்டியன் கருத்து

ரஜினியின் ஹிட்லர் முகம் தெரிந்துவிட்டது: சுப வீரபாண்டியன் கருத்து
நடிகர் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது ’மாணவர்கள் ஒரு விஷயத்திற்காக போராடுவதற்கு முன்னர் ஆசிரியர்கள் மற்றும் பெரியவர்களிடம் அந்த விஷயம் குறித்து கேட்டு தெரிந்து கொண்டு போராட வேண்டும் என்றும் இல்லையென்றால் போலீஸ் நடவடிக்கை எப்படி இருக்கும் என்று தெரியாது என்றும் அரசியல்வாதிகள் உங்களை தவறாக பயன்படுத்தினால் உங்களுடைய வாழ்க்கை தவறான திசைக்கு மாறிவிடும் என்றும் அறிவுரை கூறியிருந்தார்
 
மாணவர்கள் குறித்து ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்ச்சை ஆக்கிய அரசியல்வாதிகள் இது குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சுபவீரபாண்டியன் தனது டுவிட்டர் இணையதளத்தில் ரஜினியின் இந்த கருத்து குறித்து கூறியதாவது:
 
சிஏஏ வை ஆதரித்துப் பேசுவது ரஜினியின் குரலாகவே இருக்கட்டும்.  ஆனால், "போலீஸ் எப்படி நடந்துக்குவாங்களோ தெரியாது" என்று மிரட்டுவது அமித்ஷாவின் குரலாக அல்லவா உள்ளது!  நல்லது ரஜினி, உங்கள் இட்லர் முகத்தை இப்போதே நாடு புரிந்து கொள்ளட்டும்’ என்று பதிவு செய்துள்ளார்.
 
சுப வீரபாண்டியனின் இந்த டுவீட்டுக்கு டுவிட்டர் பயனாளிகள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது