1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (14:24 IST)

முருகதாஸ் மன்னிப்புக் கேட்கவேண்டும் – விநியோகஸ்தர்களின் போஸ்டரால் சர்ச்சை!

தர்பார் படத்தின் விநியோகஸ்தர்களால் தனக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படத்தை வாங்கிய விநியோகித்த சிலர் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்து வருகின்றனர். இது சம்மந்தமாக ரஜினியை சந்தித்து தங்கள் இழப்பை பற்றி சொல்ல முயற்சி செய்தனர். இந்நிலையில் ‘தர்பார்’ திரைப்படம் நஷ்டம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் மிகப்பெரிய லாபத்தை அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் கொடுத்திருப்பதாகவும் ஒவ்வொரு திரையரங்கு உரிமையாளர்களும் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர். 

ரஜினியை சந்திக்க முடியாததால் நட்பு ரீதியாக விநியோகஸ்தர்கள் அப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை சந்திக்க முற்பட்டனர். ஆனால், அவரது அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினர் விநியோகஸ்தர்களை வெளியேற்றியுள்ளனர்.

இந்நிலையில், தர்பார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் இழப்பீடு கோரி மிரட்டுவதாக குற்றஞ்சாட்டி காவல்துறையினரின் பாதுகாப்பு கேட்டு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை இன்றே உயர்நீதிமன்றம் விசாரிக்கும் என தெரிகிறது. 

விநியோகஸ்தர்களை அவமதிக்கும் விதமாக செயல்படும் முருகதாஸின் இந்த செயலைக் கண்டிக்கும் விதமாக சென்னையின் சில பகுதிகளில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அதில் ‘சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து இயக்குனர் A R முருகதாஸ் இயக்கிய தர்பார் திரைப்படத்தில் பல கோடி நஷ்டமடைந்து நீதி கேட்டு தார்மீக அடிப்படையில் அலுவலகம் வந்த விநியோகிஸ்தர்களை காவல் துறையை விட்டு அவமானப்படுத்திய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸே மன்னிப்பு கேள்’ என கண்டனம் தெரிவித்துள்ளனர்.