வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (10:37 IST)

மனிதன் விலங்குடன் உறவு வைத்தால் என்ன தவறு? - அமீர் சர்ச்சை பேட்டி

மனிதன் விலங்குகளுடன் உடலுறவு வைத்தால் அதில் தவறு இல்லை என்கிற ரிதியில் இயக்குனர் அமீர் தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

 
கடந்த சில வருடங்களாகவே இயக்குனர் அமீர் சமூகம் சார்ந்த பல கருத்துகளை தெரிவித்து வருகிறார். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கிறார். ஜல்லிக்காட்டு, ஸ்டெர்லைட் உள்ளிட்ட போராட்டங்களுக்கு அவர் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார். 
 
கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிராக அண்ணா சாலையில் போராட்டம் நடைபெற்றது. இதில் பாரதிராஜா, வைரமுத்து, சீமான், திரு.முருகன் காந்தி, சீமான், அமீர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.  அப்போது அமீர் மீது போலீசார் வழக்குப்பதிவும் செய்தனர்.
 
இந்நிலையில், சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
மனிதனும், விலங்கும் உடலுறவு வைத்தால் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை? அதுவும் ஒரு உணர்வுதான். விலங்குடன் சம்மதத்துடனே அது நடக்கிறது. அதில் ஒன்றும் வற்புறுத்தல் இல்லையே. அதை ஏன் எதிர்க்கிறார்கள்? என்கிற ரீதியில் அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதையடுத்து, பலரும் சமூக வலைத்தலங்களில் அமீருக்கு எதிராக கண்டனங்களையும், கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.