1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (11:42 IST)

கண்ணாடி உடையில் கவர்ச்சி விருந்து கொடுத்த நடிகையின் கேள்வி?

சினிமாவில் ஜெயிக்க திறமை மட்டும் போதாது, கவர்ச்சியும் அவசியம் என்பதை தாமதமாக உணர்ந்தார் நடிகை லாவண்யா திரிபாதி.



பிரம்மன், மாயவன் படங்களில் குடும்ப பாங்கான வேடத்தில் நடித்தவருக்கு அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகளோ வெற்றியோ கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சிக்கு மாறுவது என முடிவு செய்தார் லாவண்யா. தனது உடல் எடையை முதலில் குறைத்து எடுப்பான தோற்றத்துக்கு மாறினார். பின்னர் கவர்ச்சி உடையில் தனது புகைப்படங்களை  வெளியிட்டார். அதற்கு பலன் கிடைத்தது. சமீபத்தில் அவர் நடித்து திரைக்கு வந்த தெலுங்கு படம் ஹிட்டானது. 

இதையடுத்து மேலும் 2 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. வெற்றிக்கு கவர்ச்சியும் தேவை என்பதை புரிந்து கொண்ட  லாவண்யா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன் உடல் அழகை பளிச்சென வெளிகாட்டும் விதமாக கண்ணாடிபோன்ற ஆடையை உடுத்தி புதிய புகைப்படங்கள் வெளியிட்டு ‘அழகா இருக்கேனா’ என கேள்வி எழுப்பி உள்ளார்.