திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (10:32 IST)

என்னை கைது செய்தால் ஆட்சி கவிழ்ந்துவிடும்: கருணாஸ்

சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய கருணாஸ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், காவல்துறை அதிகாரி ஒருவர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனால் அவர் மிது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்யும் முயற்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து கருணாஸ் தலைமறைவாக இருப்பதாக நேற்று இரவு முதல் செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் தான் தலைமறைவாகவில்லை என்றும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில்தான் இருப்பதாகவும் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு போன் மூலம் கருணாஸ் பேட்டியளித்துள்ளார்.

மேலும் தன்னை போலீஸ் கைது செய்தால் அடுத்த நிமிடமே எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று கருணாஸ் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி கருணாஸை கைது செய்ய தினகரனுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுத்து கொண்டிருக்கும் ஒருசில அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளதால் கருணாஸ் கைது செய்யப்படுவாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.