செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 18 மே 2020 (16:00 IST)

சென்னைக்கு கிழக்கே மையம் கொண்ட அம்பன் – அதிஉச்ச உயர் தீவிர புயலாக மாறியது!

சென்னைக்கு கிழக்கே வங்க கடலில் மையம் கொண்டுள்ள அம்பன் புயல் தீவிர நிலையை அடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் தீவு பகுதிகளிடையே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது, இதற்கு அம்பன் என பெயரிடப்பட்டுள்ளது. புயலின் வீரியத்தை அளவிட அவற்றிற்கு தீவிர புயல், அதி தீவிர புயல் போன்ற தரவரிசை பெயர் வழங்கப்படுகிறது. இதில் அம்பன் புயல் உச்சக்கட்ட நிலையான அதிஉச்ச உயர் தீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசா முதல் வங்க தேசத்திற்கு இடையேயான பகுதியில் அம்பன் கரையை கடக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று, மாறாக தமிழகத்தில் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கலாம் மற்றும் சில பகுதிகளில் மிதமான மழை பொழிவும், காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.