திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 17 மே 2020 (18:30 IST)

தமிழகத்தில் இன்று 639 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: சென்னையில் எத்தனை பேர்?

தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இன்று தமிழகத்தில் 639 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 11224ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 639 பேர்களில் சென்னையில் மட்டும் 482 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6750ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 4 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 78ஆக உயர்ந்துள்ளது என்பதும், தமிழகத்தில் இன்று மட்டும் 12,445 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தமிழகத்தில் மொத்தம் 311,621 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 
மேலும் தமிழகத்தில் இன்று 634 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதால் கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 4172 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.