1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Yesterday Tasmac collection result

சனிக்கிழமை அளவுக்கு இல்லாவிட்டாலும் சூடுபிடித்த விற்பனை: டாஸ்மாக் வசூல் நிலவரம்!

TASMAC
நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக விற்பனை சூடுபிடித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் இடையே திறக்க அரசு முன் வந்தபோது உயர்நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டது. இதுகுறித்த மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றம் கடைகளை திறக்க அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து நேற்று முன் தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

நீண்ட நாட்கள் கழித்து மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் உற்சாகத்துடன் குவிந்த மதுப்பிரியர்கள் பல மணி நேரம் வரிசையில் நின்று மதுவை வாங்கி சென்றனர். நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் விற்பனை அதிகமாக இருக்கும் என கணக்கிடப்பட்டது. தொடக்க நாளான சனிக்கிழமை அன்று மட்டும் 163 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியிருந்த நிலையில், நேற்று 133 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. தொடக்க நாளை விட 30 கோடி ரூபாய் குறைவாக விற்பனையாகியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
இன்று முதல் உச்ச நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளும் ஏற்கப்படும் ! ஆனால் ஒரு நிபந்தனை!