1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Alcohol only after corona vaccination

கொரோனா தடுப்பூசி போட்டால்தான் மதுபானம் !

Alcohol
இந்தியாவில் கடந்தாண்டு கொரொனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்தது.

இந்நிலையில் இந்தாண்டு கொரொனா இரண்டாம் அலைப் பரவல் பரவத் தொடங்கியதை அடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்க அமலில் உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே மதுபானம் பெறமுடியும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: கொரொனா தடுப்பூசி செலுத்தியதற்கான குறுஞ்செய்தியைக் காண்பித்தால் மட்டுமே  மதுபானம் வாங்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
நாங்களும் முஸ்லிம் நாடுதான்' - ஆப்கானிஸ்தான் தாலிபன்களிடம் கத்தார் கோபம்