வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 2 செப்டம்பர் 2021 (15:11 IST)

தடுப்பூசி போட்டால் மட்டுமே மதுபானம் - மாவட்ட நிர்வாகம் அதிரடி!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவிலும் கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட 5 வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
 
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்க முடியும் என புதிய நிபந்தனையை விதித்துள்ளது மாவட்ட நிர்வாகம். அதுமட்டுமல்லாமல் இன்று முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டதன் சான்றிதழ் காண்பிக்க வேண்டும் என கூறப்படுகிறது.