திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 30 ஜூலை 2021 (17:35 IST)

கொரொனா தடுப்பூசி போட்டால் ஊக்கத்தொகை !

கடந்த வருடம் சீனாவில் இருந்து முதன் முதலில் கொரொனா தொற்று உலக நாடுகளுக்குப் பரவியது.

உலகளவில் மிகப்பெரிய உயிர்பயத்தை ஏற்படுத்திய கொரொனா வைரஸ் இந்தாண்டில் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  மூன்று வாரங்களாகக் குறைந்து வருகிறது.

இந்நிலையில் , கொரொனா மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மக்கள் இன்னும் சிலர் கோவிட் தடுப்பூசி போடவில்லை; இதற்கான விழிப்புணர்வை இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் எடுத்து வருகின்றன.

தற்போது அமெரிக்க நாட்டு அதிபர் ஜோ பிடன் ஒரு முக்கிய அறிவிப்பை அந்நாட்டு மக்களுக்கு விடுத்துள்ளார். அதில், அமெரிக்காவில் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் 100 டாலர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறியுள்ளார்.