1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 2 அக்டோபர் 2021 (19:05 IST)

கேரளாவில் தியேட்டர்களை திறக்க அனுமதி- முதல்வர் உத்தரவு

கேரளாவில் வரும் 25 ஆம் தேதி முதல் தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்தாண்டு கொரொனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்தது.

இந்நிலையில் இந்தாண்டு கொரொனா இரண்டாம் அலைப் பரவல் பரவத் தொடங்கியதை அடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு ஆமலில் உள்ளது. இருப்பினும் கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க அம்மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்‌ஷிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில்  கேரளாவில் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் உத்த்ரவிட்டுள்ளார்.