தொடர்புடைய செய்திகள்
- ஓவரா பேசிய அதிமுக பிரமுகர் - பொளந்துகட்டிய போலீஸ்
- மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திடீர் சந்திப்பு
- பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது உறுதி: அமைச்சர் ஜெயக்குமார்
- ஒரே ஒரு தினகரனையே உங்களால சமாளிக்க முடியலையே: ஜெயகுமாருக்கு தினகரன் பதிலடி
- அரசியலில் தன் பலத்தை நிரூபித்தாரா மு.க.அழகிரி?
நான் இல்லனா திமுகவுக்கு வெற்றி இல்லை; 4வது இடம்தான் : அழகிரி பேட்டி
நான் தேர்தல் பணி செய்யவில்லை எனில் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூரில் திமுக வெற்றி பெறாது என அழகிரி பேட்டியளித்துள்ளார்.
திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அழகிரி சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் பேரணியும் நடத்தினார்.
இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், அப்போது, அந்த நிருபர் நீங்கள் ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அழகிரி “நான் ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதால்தான் திமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கேட்கிறேன். இதற்கு முன் பல தேர்தல்களில் அவரும் நானும் இணைந்து பணியாற்றியுள்ளோம். என் தந்தை கருணாநிதி நிற்கும் திருவாரூர் தொகுதியிலும் நான் தேர்தல் பணிகளை செய்துள்ளேன்” என பதிலளித்தார்.
மேலும், என்னை சேர்த்துக்கொண்டால் திமுக வலிமை அடையும். இல்லையெனில், திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் திமுக வெற்றி பெறாது. அந்த தொகுதிகளில் நான்காம் இடத்திற்கே திமுக செல்லும். அதன் பின்னரே என் பலன் ஸ்டாலினுக்கு தெரிய வரும்” என அவர் பேட்டியளித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
