1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 5 செப்டம்பர் 2018 (23:13 IST)

ஒரே ஒரு தினகரனையே உங்களால சமாளிக்க முடியலையே: ஜெயகுமாருக்கு தினகரன் பதிலடி

அதிமுக அமைச்சர்கள் தினகரன் குறித்து தினந்தோறும் விமர்சனம் செய்து வரும் நிலையில் அத்தனை பேரின் விமர்சனங்களுக்கும் தினகரன் உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருகிறார். அந்த வகையில் நேற்று அமைச்சர் ஜெயகுமாரின் கருத்து ஒன்றுக்கு இன்று தினகரன் கூறியுள்ளதை தற்போது பார்ப்போம்

பத்தாயிரம் தினகரன்கள் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது” என்று ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறினார். இதுகுறித்து இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்ளிடம் கூறியபோது, 'எப்போதுமே அமைச்சர் ஜெயகுமார் உண்மைக்கு புறம்பானதை மட்டுமே பேசுவார். என்னை பார்த்து காளான் என்று சொல்கிறார். அப்படியென்றால் நான் ஆலமரமாக வளர்ந்து கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம். ஒரு தினகரனையே இவர்களால் சமாளிக்க முடியவில்லை. எப்படி பத்தாயிரம் தினகரன்களை சமாளிப்பார்கள்?” என்று கூறினார்.

ஏற்கனவே முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் தினகரன் குறித்து கூறிய கருத்துக்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்து வந்த தினகரன் தற்போது அமைச்சர் ஜெயகுமாரின் கருத்துக்கும் பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.