வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 6 செப்டம்பர் 2018 (22:35 IST)

மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திடீர் சந்திப்பு

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் சற்றுமுன்னர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு வருகை தந்தார். அங்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி, மற்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் பிரணாப் முகர்ஜி அவரக்ளை வரவேற்றனர்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை சந்தித்த பிரணாப் முகர்ஜி அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும், அதன் பின்னர், கருணாநிதியின் மறைவுக்கு, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் த.மா.கா தலைவர் ஜி.கே. வாசனும், கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி அவர்களை தனக்கு 48 வருடங்களாக தெரியும் என்றும், குடியரசு தலைவர் பதவி முடிந்தவுடன் என்னுடைய முதல் சென்னை வருகையில் அவருடைய இல்லத்திற்கு சென்றது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதாகவும் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.