திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 6 செப்டம்பர் 2018 (16:55 IST)

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது உறுதி: அமைச்சர் ஜெயக்குமார்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் அரசு உறுதியாக உள்ளது என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
 
இதைத்தொடர்ந்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், 15வது நிதிக்குழு கூட்டத்திற்கு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
 
அந்த 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம் கிடைத்த பின்பே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.