தொடர்புடைய செய்திகள்
- அதிமுக தலைமையை ஏற்று கொண்டால் விஜய் கட்சியுடன் கூட்டணி: ஜெயக்குமார்
- அதிமுகவில் மீண்டும் தளவாய் சுந்தரம்.. பறிபோன பதவி மீண்டும் கிடைத்தது..!
- அதிமுகவிடம் 80 தொகுதிகள் கேட்டாரா விஜய்? அரசியல் விமர்சகர்களின் கருத்துக்கள்..!
- பொதுக்கூட்டத்திற்கு வந்தால், அவரவர் உட்கார்ந்திருக்கும் சேர் இலவசம்! - அள்ளிச் சென்ற அதிமுக தொண்டர்கள்!
- அதிமுகவுடன் கூட்டணி என்பது முற்றிலும் தவறு: தவெக புஸ்ஸி ஆனந்த்
2026ல் அதிமுக ஆளுங்கட்சி.. எங்கள் கூட்டணி கட்சி எதிர்க்கட்சி: பொள்ளாச்சி ஜெயராமன்
2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர், அதிமுக ஆளும் கட்சியாகவும், அதிமுகவின் கூட்டணி கட்சி எதிர்க்கட்சியாகவும் இருக்கும் என்றும், மற்ற கட்சிகள் எல்லாம் காணாமல் போகும் என்றும், அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் நடந்த அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தை அடுத்து, பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 2026 இல் அதிமுக ஆளுங்கட்சியாகவும், எங்கள் கூட்டணி கட்சி எதிர்க்கட்சியாகவும் இருக்கும் என்று தெரிவித்தார்.
அதிமுகவுடன் கூட்டணி வைக்காதவர்கள் வெற்றி காலி டப்பாக்கள் மட்டுமே என்றும், பல கட்சிகளுக்கு அதிமுக சின்னம் பெற்று கொடுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், அதே நேரத்தில், அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையும் என்பது குறித்து அவர் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இப்போதைக்கு, அதிமுக கூட்டணியில் உள்ள பெரிய கட்சி தேமுதிக மட்டுமே என்பதும், பாமக மற்றும் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் உட்பட ஒரு சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Siva
