வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2024 (12:03 IST)

அதிமுகவுடன் கூட்டணி என்பது முற்றிலும் தவறு: தவெக புஸ்ஸி ஆனந்த்

vijay-bussy anand
2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் அதிமுகவுடன் கூட்டணி என்பது முற்றிலும் தவறு என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். மக்களை குழப்பம் நோக்கில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்படுகின்றன என்றும் அதனை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், மற்ற அரசியல் கட்சி தொடங்கிய நடிகர்கள் போல் தனித்து நிற்கும் தவறை செய்ய மாட்டார் என்றும் அவர் ஒரு பிரம்மாண்டமான கூட்டணியை அமைப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
குறிப்பாக அதிமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளை அவர் இணைத்து ஒரு கூட்டணியை உருவாக்குவார் என்று கூறப்படும் நிலையில், இது குறித்த செய்திகள் இணையதளங்களில் வெளியாகி கொண்டிருக்கின்றன.
 
இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்பது முற்றிலும் தவறு என்று புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். புஸ்ஸி ஆனந்த் இவ்வாறு தெரிவித்திருந்தாலும், அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran