வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 18 நவம்பர் 2024 (19:01 IST)

அதிமுகவில் மீண்டும் தளவாய் சுந்தரம்.. பறிபோன பதவி மீண்டும் கிடைத்தது..!

Thalavai Sundaram
ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்ததால், அதிமுக கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளர் தலைவாய் சுந்தரம் அனைத்து பொறுப்புக் கூறுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டதாக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த நிலையில், தற்போது அவர் மீண்டும் அதிமுகவில்  அதே பொறுப்புகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளவாய் சுந்தரம் உரிய விளக்கமளித்ததால், அவர் வகித்து வந்த கட்சி பதவிகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மற்றும் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தலைவாய் சுந்தரம், கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காரணத்தினால், அது குறித்து விளக்கம் கேட்டு, அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இந்நிகழ்வில் கலந்து கொண்டது சம்பந்தமாக தளவாய் சுந்தரம் வருத்தம் தெரிவித்து, தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளார். இதனை அடுத்து, அவர் அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பில் இன்று முதல் நியமனம் செய்யப்படுகிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Edited by Siva