ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2024 (10:06 IST)

அதிமுக தலைமையை ஏற்று கொண்டால் விஜய் கட்சியுடன் கூட்டணி: ஜெயக்குமார்

அதிமுக தலைமையை ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்றும், இன்னொரு கட்சியின் தலைமையில் அதிமுக கூட்டணியில் இணையாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளதை அடுத்து, அதிமுக தலைமையை விஜய் ஏற்று கொண்டால் அவருடன் கூட்டணி என்பதை மறைமுகமாக அவர் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

நடிகர் விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில், எந்த கட்சியின் தலைமையில் கூட்டணி, யார் முதல்வர் வேட்பாளர் ஆகியவை குறித்த விவகாரங்கள் இரு கட்சிகள் இடையே இருந்து வருவதாகவும், விஜய் தனது கட்சியின் தலைமையில் தான் கூட்டணி என்றும் தனது கட்சிக்கு 80 தொகுதிகள் வேண்டும் என்றும் அவர் அதிமுகவுடன் நிபந்தனை வைத்ததாக கூறப்பட்டது.

இதற்கு அதிமுக ஒப்புக்கொள்ளவில்லை என்பதால், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய் கட்சி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இது கருத்து கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: “எங்கள் பொதுச் செயலாளர் ஏற்கனவே திட்டவட்டமாக கூறிவிட்டார். பாஜக தவிர மற்ற எந்த கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில் ஏற்றுக்கொள்ளும் கட்சியை நாங்கள் கூட்டணியாக ஏற்றுக் கொள்வோம்,” என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, விஜய்யும் அதிமுக தலைமையை ஏற்றுக்கொண்டால் கூட்டணியில் இணையலாம் என்பதை அவர் மறைமுகமாக சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.


Edited by Mahendran