வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 18 நவம்பர் 2024 (12:56 IST)

பொதுக்கூட்டத்திற்கு வந்தால், அவரவர் உட்கார்ந்திருக்கும் சேர் இலவசம்! - அள்ளிச் சென்ற அதிமுக தொண்டர்கள்!

அதிமுக பொதுக்கூட்டத்திற்கு வந்தால், கூட்டம் முடிந்தவுடன் அவரவர் உட்கார்ந்து இருக்கும் சேர் இலவசம் என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் என்ற பகுதியில் அதிமுக கூட்டம் நடந்த நிலையில், பலமுறை இந்த பகுதியில் கூட்டம் நடந்தபோது பொதுமக்கள் கூட்டமே இல்லாமல் இருந்தது. அப்படியே கூட்டம் இருந்தாலும், பாதியில் எழுந்து சென்று விடுவார்கள்.

இந்த நிலையில், காசு கொடுத்து, பரிசு பொருட்கள் கொடுத்து, மது மற்றும் பிரியாணிகளை வாங்கி கொடுத்து ஆட்களை சேர்ப்பதற்கு பதிலாக, திடீரென அதிமுக ஒரு புது பார்முலாவை பயன்படுத்தியது. இதன் மூலம் கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் தாங்கள் உட்கார்ந்திருக்கும் சேரை, கூட்டம் முடிந்தவுடன் வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம் என்று அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஏராளமான பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, கூட்டம் முடிவரை பொறுமையாக காத்திருந்து, அதன்பின் அவர்கள் உட்கார்ந்து இருந்த சேரை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

இந்த புதுயுக்தி பொதுமக்கள் மத்தியில் சரியாக வேலை செய்வதாக அதிமுக தொண்டர்கள் கூறி உள்ளனர். நேற்று நடந்த கூட்டத்திற்காக 1500 சேர்கள் போடப்பட்டிருந்ததாகவும், அனைத்தும் இலவசமாக கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.


Edited by Siva