1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. AIADMK case against holding local elections

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதை எதிர்த்து அதிமுக வழக்கு

அதிமுக வழக்கு
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர்  9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும், மனு தாக்கல் செய்ய கடைசி தினம் செப்டம்பர் 22 என்றும் அறிவிக்கப்பட்டது. 
 

மேலும் வேட்புமனு பரிசீலனை செப்டம்பர் 23 என்றும், வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் செப்டம்பர் 25 என்றும், அக்டோபர் 6 மற்றும் 9 களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 12 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முழு ரிசல்ட் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
கேரளாவில் 20 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு!