1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (17:32 IST)

ஒரே நாளில் 600 கோடி ரூபாய்க்கு ஸ்கூட்டர் விற்பனை… ஓலா சாதனை!

ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்க தொடங்கியுள்ள நிலையில் தங்களது ஆலையில் முழுவதும் பெண்களுக்கு வேலைவாய்ப்பளிப்பதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் பிரபலமாக இருந்து வரும் ஆன்லைக் கால் டாக்ஸி நிறுவனம் ஓலா. இந்த நிறுவனம் சமீபத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க போவதாக அறிவித்து முன்பதிவுகளை தொடங்கியது. பலரும் முன்பதிவு செய்திருந்த நிலையில் சமீபத்தில் தாங்கள் தயாரித்து வரும் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மாடல்களையும் வெளியிட்டது ஓலா.

சில தொழில்நுட்ப காரணங்களால் குறிப்பிட்ட தேதியில் ஸ்கூட்டர்களை காலதாமதாமாக செப்டம்பர் 15ல் வெளியிடுவதாக அறிவித்துள்ளது இந்நிலையில் சமீபத்தில் பேசிய ஓலா இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் “ஓலா ப்யூச்சர் தொழிற்சாலை முழுவதும் பெண்களால் நடத்தப்படும் என அறிவிக்கிறேன். ஆத்மநிர்பார் திட்டத்தின் மூலம் இது சாத்தியமாகும். இந்தியாவில் பெண்களால் முழுதாக நடத்தப்படும் தொழிற்சாலையாக இது இருக்கும் என்பதுடன், பெண்களுக்கான வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தையும் இது அதிகரிக்கும்” என கூறியுள்ளார்.

செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஆன்லைன் மூலமாக விற்பனை நிகழ்ந்த நிலையில் முதல் நாளில் மட்டும் 600 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு நொடியிலும் சுமார் 4 ஸ்கூட்டர்கள் விற்பனை ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆர்டர் செய்தவர்களுக்கு நேரடியாக ஸ்கூட்டர்கள் டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.