இ-பட்ஜெட் தாக்கல்: அதிமுக வெளிநடப்பு!
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் இன்று முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும்.
இந்நிலையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்து வாசித்தார். இதனிடையே 6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் பொருந்தும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக பட்ஜெட் உரைக்கு முன்னதாகவே அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து விளக்கம் அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, " நீட் தேர்வு ரத்துக்கு தீர்வு கானாததை கண்டித்தும், வெள்ளை அறிக்கை என கூறி வெற்றறிக்கை வெளியிட்டதையும், ஊதாரித்தனமான செலவு செய்த முன்னாள் அரசு என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விமர்ச்சனம் செய்த நிதி அமைச்சர் அவர்களைக் கண்டித்தும்,பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் திமுக அரசை கண்டித்தும் இந்த வெளிநடப்பு செய்தோம் என விளக்கம் கொடுத்துள்ளார்.