1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn govt file agriculture budget

இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல்!.. விவசாயிகள் எதிர்பார்ப்பு என்ன?..

cm vijay
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதல் பட்ஜெட்டை நேற்று நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தாய்மாமன் திட்டம், அண்ணன் சீர், வெற்றி மடிக்கணினி உள்ளிட்ட சில அறிவிப்புகள் வெளியானது. ஆனாலும் மக்கள் எதிர்பார்த்த குடும்ப தலைவிக்கு மாதம் 2500, வருடத்திற்கு 6 இலவச சிலிண்டர்கள், வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகை, அனைத்து அரசு பேருந்துகளிலும் மகளிர் இலவச பயணம் போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படிப்பட்ட எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை..

இந்நிலையில்தான் இன்று அமைச்சர் வினோத் தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார். கிராமப்புற வாழ்வாதாரத்திற்கும் ஒரு மாநிலத்தின் உணவு பாதுகாப்புக்கும் வேளாந்துறை மிகவும் அவசியம். விவசாயிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. எனவே,  வேளாண்மை மற்றும் அது தொடர்பான துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது..

விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து தவெக சார்பில் அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. அதேபோல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் அரசு சிறப்பான திட்டங்களை அறிவிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். இதுவெல்லாம் இன்றைய பட்ஜெட்டில் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
சவுக்கு சங்கரின் மகன் தற்கொலையா?.... நெட்டிசன்கள் ஷாக்!...