வெள்ளி, 13 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (14:36 IST)

அண்ணாமலை ஏழு ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது! - ஜெயக்குமார்!

Jayakumar

அதிமுக - பாஜக இடையேயான மோதல் வலுத்து வரும் நிலையில் அண்ணாமலை ஏழு ஜென்மம் எடுத்து வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

 

 

சமீப காலமாக அதிமுக - பாஜக பிரபலங்கள் இடையே வாய் சண்டை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியை, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சித்து பேசியிருந்தது அதிமுகவினர் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் அண்ணாமலை பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “அதிமுக மாபெரும் இயக்கமாகும். அதை அழிக்க யாராலும் முடியாது. கருணாநிதியாலேயே அது முடியவில்லை. எனவே அண்ணாமலையின் அப்பா வந்தாலும், அவரது அப்பாவின் முப்பாட்டன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்யமுடியாது. அதிமுகவை தொட்டுப் பார்க்க நினைத்தால் அவர்கள் கெட்டுப் போவார்கள்.

 

எனவே அண்ணாமலை ஏழேழு ஜென்மம் எடுத்து வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. அண்ணாமலை 3 வயது குழந்தை. இந்த குழந்தை 52 வருட ஆலமரம் போன்று இருக்கும் இயக்கத்தை அழிக்காமல் விடமாட்டேன் என பேசுவது விரக்தியின் வெளிப்பாடே” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K