வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (13:16 IST)

தலைவர்களை கடுமையான வார்த்தைகளால் பேசக்கூடாது: !அண்ணாமலைக்கு தமிழிசை அறிவுரை

அரசியல் தலைவர்களை பற்றி பேசும்போது கடுமையான வார்த்தைகளால் பேசக்கூடாது என அண்ணாமலைக்கு தமிழிசை சௌந்தரராஜன் அறிவுரை கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணாமலை அதிரடியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பதிலடி தரும் வகையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் உட்பட பலர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சு பாஜக வட்டாரத்திலேயே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக முன்னாள் புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அண்ணாமலையின் பேச்சு குறித்து கூறிய போது தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

அவரவருக்கு ஒரு அரசியல் பாணி இருக்கலாம், அண்ணாமலைக்கும் ஒரு பாணி உள்ளது. ஆனால் தலைவர்களை பற்றி பேசும்போது வார்த்தைகள் கடுமையாக இருக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி குறித்த அண்ணாமலையின் பேச்சுக்கு தமிழிசை சௌந்தரராஜன் அறிவுரை கூறியுள்ளார்.

Edited by Mahendran