வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (16:16 IST)

ஈபிஎஸ் குறித்து சர்ச்சை பேச்சு.. அண்ணாமலை உருவ படத்தை எரித்த அதிமுகவினர்..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தைகள் பேசிய அண்ணாமலையை கண்டித்து அதிமுகவினர் அவருடைய உருவ படத்தை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி சாமி தவழ்ந்து சென்று பதவியை வாங்கினார் என்று அண்ணாமலை கூறிய நிலையில் அவருடைய உருவ பொம்மை பொம்மையை கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே அதிமுகவினர் எரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி குறித்து அண்ணாமலை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வருவதாக அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அதிமுக கொடியுடன் திரண்ட தொண்டர்கள் திடீரென அவருடைய உருவ பொம்மையை எரித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினர் கண்டித்தனர்
 
 தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு, பச்சை இங்கில் பத்து ஆண்டு காலம் கையெழுத்து போட்ட என்னை பற்றி பேச தகுதி இல்லை என்று அண்ணாமலை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



Edited by Siva