1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. jayakumar says about admk and stalin

ஸ்டாலின் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது: ஜெயக்குமார்

jayakumar
மு க ஸ்டாலின் ஏழு ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 
 
அதிமுகவில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஒற்றை தலைமை பிரச்சனையால் அக்கட்சி  அழிந்துவிடும் என்று திமுக தரப்பினர் கூறி வருகின்றனர்.
 
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏழேழு ஜென்மம் அல்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவில் அழிக்க முடியாது என்றும் ஸ்டாலின் கனவு பலிக்காது என்றும் கூறினார். 
 
மேலும் ஒருவரை அழிக்க ஒருவர் வரவேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் அண்ணா திமுகவை அழிக்க ஒருவர் பிறக்கவே முடியாது என்று கூறினார்.
 
மேலும் ஸ்டாலின் முக அழகிரியை வேண்டுமானால் அழிக்கலாம் ஆனால் அண்ணா திமுகவை அசைக்க முடியாது என்றும் அவர் கூறினார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
காவல்நிலையத்தில் கையெழுத்து போட சென்ற இளைஞர் மர்ம மரணம்: அதிர்ச்சி தகவல்