ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (16:59 IST)

2-வது தலைநகரமாகிறதா திருச்சி? மேயர் அன்பழகன் தகவல்..!

Trichy
ருச்சி நகரை இரண்டாவது தலைநகரமாக ஆக்குவது குறித்து தமிழக முதலமைச்சர் முடிவு எடுப்பார் என திருச்சி மேயர் அன்பழகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
தென் மாவட்டங்களில் உள்ளோர் தலைநகரில் உள்ள பணியை செய்வதற்கு நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் எனவே திருச்சியை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த திருச்சி மேயர் அன்பழகன் திருச்சியை இரண்டாவது தலைநகரம் ஆக்குவது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் விரைவில் முடிவு செய்வார் என்று தெரிவித்தார். 
 
சென்னைக்கு நிகரான வளர்ச்சி திட்டங்கள் திருச்சியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். திருச்சி மற்றும் தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று சொல்லி
 
Edited by Siva