1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. One and a Half Hours of Budget Speech: Finance Minister Maria Wilson Speaks as Udhayanidhi Stalin and Opposition Remain Unusually Silent

ஒன்றரை மணி நேரமாக பட்ஜெட் வாசிக்கும் நிதியமைச்சர் மரிய வில்சன்.. ஒரு சச்சரவு இல்லாமல் அமைதியாக இருக்கும் உதயநிதி..

TVK Budget 2026
ஒன்றரை மணி நேரத்தை கடந்து தவெக அரசின் நிதியமைச்சர் மரிய வில்சன் தனது வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் உரையை சட்டமன்றத்தில் தொடர்ச்சியாக வாசித்து வருகிறார். பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரங்களில் எதிர்க்கட்சிகள் அவையின் மைய பகுதிக்கு வந்து கோஷமிடுவதும், வெளிநடப்பு செய்வதும் வழக்கமான ஒன்றாகவே இருந்துள்ளது.
 
ஆனால், இன்றைய கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உட்பட அனைத்து திமுக உறுப்பினர்களும் அதிமுக உறுப்பினர்களும் எவ்விதச் சச்சரவும் இன்றி அமைதியின் சிகரமாக தங்கள் இருக்கைகளில் அமர்ந்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
 
கடந்த காலங்களில் அவையை முடக்க முயன்ற எதிர்க்கட்சிகளின் உத்திகள் இம்முறை முற்றிலும் செயலிழந்து போயுள்ளன. முதலமைச்சர் விஜய்யின் சட்டப்பூர்வமான அதிரடி அணுகுமுறையும், அவையின் கண்ணியத்தை காப்பாற்ற அவர் விடுத்த கடுமையான எச்சரிக்கையும்தான் எதிர்க்கட்சியினரை இப்படி 'சமத்தாக' அமர வைத்திருக்கிறது என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு நிலவும் இந்த அசாத்திய அமைதி, தவெக அரசு சட்டமன்றத்தில் செலுத்தும் முழுமையான ஆதிக்கத்தை காட்டுகிறது. நிதியமைச்சர் வாசிக்கும் ஒவ்வொரு நிதி ஒதுக்கீட்டையும் எதிர்க்கட்சியினர் எவ்வித இடையூறும் இன்றி அமைதியாக கேட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் இந்த அமைதியான போக்கால் தவெகவின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் மிகச் சுமூகமாகவும் வெற்றிகரமாகவும் நடந்து முடிவது ஆளுங்கட்சி தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
About Writer
சிவலிங்கம்
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
தமிழக பட்ஜெட் 2026-27!.. அரசு பள்ளிகள் நவீனமயமாக்கல்!.. ரூ.2132 கோடி ஒதுக்கீடு!..