1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK will not attend assembly for next teo days

சட்டப்பேரவை கூட்டத்தை இன்றும் நாளையும் புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு!

சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தை இன்றும் நாளையும் புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. 

 
தமிழக ஆண்டு பட்ஜெட் மீதான கூட்டத்தொடர் தமிழக சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெற இருப்பதால் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே கூட்டத்தொடரை முடித்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான விவகாரம் மீண்டும் விசாரிக்கப்படும் என தெரிவித்தார். இதை எதிர்த்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு எழுந்தது.
 
இந்நிலையில் அதிமுகவுடன் மற்ற எதிர்கட்சிகளான பாமக, பாஜகவும் சட்டப்பேரவையில் வெளியேறியுள்ளனர். பிறகு வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தை இன்றும் நாளையும் புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. 
 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கூட்டாக இதனை தெரிவித்துள்ளனர்.