செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 ஜூன் 2021 (20:08 IST)

கோவின் இணையதளத்தில்.... தமிழ் புறக்கணிப்பு...

இந்தியாவில் உருமாறிய கொரொனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. அனைத்து மக்களையும் காக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொரொனாவால்  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள  சினிமா கலைஞர்களுக்கு  முன்னணி நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் தொடர்ந்து உதவிகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. கோவின் இணையதளத்தில் ஆங்கிலம் மற்றும்  இந்தி மட்டுமே இருந்த நிலையில் இன்று மேலும் 9 மொழிகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

கொரொனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் புறக்கப்பட்டுள்ளதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழ் ஆர்வலரக்ள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.