இன்றும் நாளையும் 10 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை நிலவரங்களை அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் இன்று ஆகஸ்ட் 8ஆம் தேதியும் நாளை ஆகஸ்ட் 9ஆம் தேதியும் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
அடுத்த நான்கு நாட்களில் மழை பெய்யும் இடங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
ஆகஸ்ட் 8 மற்றும் 9 தேதி மழை பெய்யும் மாவட்டங்கள்: நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் டெல்டா ,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்
ஆகஸ்ட் 10ஆம் தேதி மழை பெய்யும் மாவட்டங்கள்: நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர்
ஆகஸ்ட் 11ஆம் மழை பெய்யும் மாவட்டங்கள்: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால்