1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (10:37 IST)

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அதிமுக: சொன்னது யாருன்னு கேட்டா சிரிப்பு வரும்

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அதிமுக திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தோல்வியடையும் என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ வான போஸ் உடல் நலக்குறைவால் சமீபத்தில் மரணமடைந்தார். விரைவில் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கேப்பை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் தினகரன் திடீரென திருப்பரங்குன்றம் தொகுதிக்கு விசிட் அடித்து அப்பகுதி மக்களுக்கு தாராளமாக தனது கட்சிச் சின்னமான குக்கரை அன்பளிப்பாக வழங்கினார்.

பின் பேசிய தினகரன் ஆர்கே நகர் தேர்தலில் பெற்றி பெற்றது திருப்பரங்குன்றத்திலும் வெற்றி பெற்று திமுக, அதிமுக கட்சிகளுக்கு பாடம் புகட்டுவோம் என்றார்.
 
இதுகுறித்து பேசிய அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஆனால் காலம் தாழ்த்தாமல் மத்திய-மாநில அரசுகள் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தவேண்டும்.
ஆர்.கே நகர் தொகுதியில் ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்த போதிலும் எங்களிடம் அதிமுக அரசு தோற்றுவிட்டது. அதேபோல் இந்த தேர்தலிலும் வெற்றி பெறாது. எனென்றால் எங்களுக்கு மக்கள் பலம் இருக்கிறது. ஆகவே திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என கூறினார்.
 
இவ்வளவு பேசும் தினகரன் அணியினரை ஆர்கே நகர் மக்கள் டோக்கன் மட்டும் கொடுத்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக வசைபாடுவது நாம் அனைவரும் அறிந்ததே. முதலில் உங்கள் முதுகை பாருங்கள் தினகரன் அவர்களே என பலர் சமூக வலைதளங்களில் தினகரனை கிண்டலடித்து வருகின்றனர்.