1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy rains await in 6 districts! Which districts?

6 மாவட்டங்களில் காத்திருக்குது கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

Rain

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மே மாதத்தில் பெரும்பாலும் கடும் வெப்பத்தை தாண்டி பல பகுதிகளிலும் நல்ல மழை பொழிந்தது. தற்போது ஆங்காங்கே சில பகுதிகளில் மழை பெய்தாலும் சில மாவட்டங்களில் வெப்பநிலை சற்று உயர்ந்து காணப்படுகிறது.

 

இந்நிலையில் இன்று 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துளது. அதன்படி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாக்குமரி ஆகிய 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

அடுத்த கட்டுரையில்
சிந்து நதிநீரை திறந்துவிடாவிட்டால் இந்தியாவுடன் போர்: பிலாவல் பூட்டோ ஆவேசம்..!