1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Israel-Iran Ceasefire Announcement: Indian Stock Market Soars - Investors Rejoice!

போர் நிறுத்தம் என டிரம்ப் அறிவிப்பு.. உச்சத்திற்கு செல்கிறது இந்திய பங்குச்சந்தை..!

share
இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் அறிவித்த நிலையில், இந்திய பங்குச் சந்தை உச்சத்தை எட்டி, முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 852 புள்ளிகள் உயர்ந்து 82,660 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 245 புள்ளிகள் உயர்ந்து 22,152 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில், பெல் (BEL), என்.டி.பி.சி (NTPC), ஓ.என்.ஜி.சி (ONGC) உள்ளிட்ட சில பங்குகளை தவிர, மற்ற அனைத்து பங்குகளும் அபாரமாக உயர்ந்துள்ளன. இதனால், பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நேற்று சுமார் 500 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்த நிலையில், அந்த நஷ்டத்தை இன்று மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
24 சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல், துன்புறுத்தல்! கணித ஆசிரியர் போக்சோவில் கைது!