1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (15:49 IST)

வெயிலு மழையில ஆடுனா மூணு ரூபாதான் சம்பளம் - கஸ்துரி ஒப்பன் டாக்

திரைத்துறையில் பண விஷயத்தில் தன்னை பலரும் ஏமாற்றிய சம்பவமே அதிகமாக நடந்தது என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

 
நடிகை கஸ்தூரி டிவிட்டரில் சமூகம் சார்ந்த தனது கருத்துகளை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் “நடித்து வாங்கிய ஊதியத்திற்கு உரிய வருமானவரி செலுத்தியிருக்கிறீர்களா?” என ஒரு ரசிகர் கேள்வி எழுப்பியிருந்தார்.
 
இதற்கு பதிலளித்த கஸ்தூரி “நான் வரி ஏய்ச்சதில்லை; என்னை பலர் காசு விஷயத்துல ஏய்ச்சிருக்காங்க! பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுக்கிட்டதுதான் அதிகம்!  
 
தமிழ்படம்2 வில் காட்டுறாங்களே, வெயிலு மழையில கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசில மூணு ரூபா சம்பளம், அதுபோல தான்!” என பதிலடி கொடுத்தார்.