தொடர்புடைய செய்திகள்
- 1 லட்ச ரூபாய் பில்லா? நீங்க கரண்ட் பில் கட்டாம இருந்துட்டு..!? - கங்கனாவை வறுத்தெடுத்த மின்வாரியம்!
- சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!
- பள்ளிகளில் அதிகரித்த பாலியல் குற்றச்சாட்டு! ஆசிரியர்கள் உட்பட 23 பேர் பணி நீக்கம்!
- 6ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. அரியலூர் அரசு பள்ளி ஆசிரியர் கைது..!
- சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!
24 சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல், துன்புறுத்தல்! கணித ஆசிரியர் போக்சோவில் கைது!
பள்ளியில் படிக்க வந்த சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்த கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிர்மவுர் மாவட்ட அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். 8 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி வந்த அவர் அப்பள்ளி மாணவிகளிடம் அடிக்கடி சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். பல மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, பாலியல் சீண்டல்கள் உள்ளிட்டவற்றை செய்து வந்துள்ளார்
ஒரு கட்டத்திற்கும் மேல் இதை பொறுத்துக் கொள்ள முடியாத மாணவிகள் நேரடியாக பள்ளி முதல்வர் காந்தா தேவியிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். 24 மாணவிகள் அளித்த புகாரின் பேரில் அந்த புகாரை பள்ளி முதல்வர் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுவிற்கு அனுப்பியுள்ளார்.
அதை தொடர்ந்து அதிரடி நடவடிக்கையாக கணித ஆசிரியரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K
