திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (16:27 IST)

நான் கூறினால்தான் சிக்னல் - காங்கிரஸ் கூட்டணி குறித்து கமல்ஹாசன் பேட்டி

காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

 
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நாடாளுமன்றத்தில் காங்கிரஸின் தலைமையை ஏற்பது போல் சில ஊடகங்களில் போட்டியளித்தார். அதை நிரூபிக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு முன்பு அவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். எனவே, காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க அவர் திட்டமிடிருப்பதாக செய்திகள் வெளியானது.
 
இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து கமல்ஹாசன் சிக்னல் கொடுத்துள்ளார். ஆனால், நாங்கள் திமுகவுடன்தான் இப்போதும் கூட்டணியில் இருக்கிறோம் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். 
 
இதுபற்றி கமல்ஹாசனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது “நான் கூறினால்தான் அது சிக்னல். நான் கூறியதாக மற்றொருவர் கூறியது வெறும் செய்திதான். ராகுல் காந்தியை சந்தித்து கூட்டணி பற்றி நான் எதுவும் பேசவில்லை. நாங்கள் வேறு விஷயங்கள் பேசினோம்” என பதிலளித்தார்.