ரஜினி, கமல் சரியில்லை ; தினகரன் சூப்பர் : அட்டகத்தி தினேஷ் பேட்டி

Last Modified வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (13:10 IST)
ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரனுக்கே தன்னுடைய ஆதரவு என நடிகர் அட்டக்கத்தி தினேஷ் தெரிவித்துள்ளார்.

 
அட்டக்கத்தி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் தினேஷ். அதன் பின் சில திரைப்படங்களில் நடித்தார். அவரின் நடிப்பில் ‘அண்ணனுக்கு ஜே’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
 
இப்படத்தில் அவர் அரசியல்வாதியாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய தினேஷ் “சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அரசியலில் நுழையும் இளைஞனை பற்றிய படமே அண்ணனுக்கு ஜே.. சிறு வயது முதலே எனக்கும் அரசியல் ஆசை இருக்கிறது. ஆனால், அதற்கு நல்ல அனுபவம் வேண்டும். 
 
இங்கே வழிகாட்ட சரியான தலைவர்கள் இல்லை. போராடினால் துப்பாக்கியால் சுடுகிறார்கள். நான் ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன். மாறாக தினகரனை ஆதரிப்பேன். பொதுமக்களில் ஒருவராக கூறுகிறேன். அவர் நன்றாக செயல்படுகிறார். எல்லாவற்றையும் நேர்த்தியாக அணுகிறார்” எனக் கூறினார். 


இதில் மேலும் படிக்கவும் :