1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (15:18 IST)

ஆண் ஆதிக்கம் நிறைந்தது சினிமா துறை - மியா ஜார்ஜ்

திரையுலகில் ஆண் ஆதிக்கம் நிறைந்திருப்பதாக பிரபல மலையாள நடிகை மியா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
தமிழில் அமரர் காவியம், வெற்றிவேல், நேற்று இன்று நாளை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மியா ஜார்ஜ் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். 
 
சமீபத்தில் பேசிய அவர் பெண்களுக்கு எல்லா துறையிலும் பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. குறிப்பாக பெண்கள் வேலை செய்யும் இடங்களில் நிறைய அச்சுறுத்தல்களை சந்திக்கிறார்கள். பெண்களுக்கு எதிராக செயல்படுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
 
சினிமாவில் ஆணாதிக்கம் இருக்கிறது. திரைப்பட தொழில் சம்பந்தமான எல்லா வேலைகளையும் அவர்கள்தான் செய்கிறார்கள். சினிமா வியாபாரம் கதாநாயகர்களை சார்ந்துதான் நடக்கிறது. இவ்வாறு மியா ஜார்ஜ் கூறினார்.